கொரானா பாதிப்பு பட்டியலில் அதிமுக MLA

கொரானா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.பழனி(57) உள்ளார். இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் கே.பழனி மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கே.பழனி உடல்சோர்வால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் அன்றே கரோனா பரிசோதனை செய்ததாகவும், இதில் வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனடியாக சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருவதாக அதிமுகவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post