"பாப்புலர் ஃப்ரண்ட் டே" காஞ்சிபுரத்தில் கொடியேற்றி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது ..!!

பாப்புலர் ஃப்ரண்டின் உதய தினமான பிப்ரவரி 17   இன்றைய தினம் தேசம் முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தேசத்தை அதிர்ச்சியடைய செய்த கோழைத்தனமான  தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட   நமது  இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ,வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு  நம்முடைய ஆதரவை, ஆறுதலை வெளிப்படுத்திடும் விதமாகவும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்  அகமது முகைதீன் அவர்கள் தலைமையில் பாப்புலர் ஃப்ரண்டின் கொடி ஏற்றப்பட்டது. அதிலும் ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள் .

புகைப்பட உதவி:
       மல்லியின் சமூக ஆர்வலர்;
           ஃபைசல் அஹமது.



Post a Comment

Previous Post Next Post