"பாப்புலர் ஃப்ரண்ட் டே " எல்லையில் உயிர்நீர்த்த சகோதரர்களுக்கு அஞ்சலியுடன் அதிரையில் கொடியேற்றம் ..!!

பாப்புலர் ஃப்ரண்டின் உதய தினமான பிப்ரவரி 17   இன்றைய தினம் தேசம் முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தேசத்தை அதிர்ச்சியடைய செய்த கோழைத்தனமான  தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட   நமது  இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ,வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு  நம்முடைய ஆதரவை, ஆறுதலை வெளிப்படுத்திடும் விதமாகவும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த வகையில் அதிராம்பட்டினத்தில் பிலால் நகர் உட்பட மூன்று இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட்  உதயதினமான இன்று கொடி ஏற்றப்பட்டது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜா அஹமது அவர்கள் கலந்துந்துகொண்டு சிறப்பித்தார். இங்கும் ஜம்மு



 காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post