தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சிறுமி அஃப்ராவிற்கு நிதி திரட்டல் .!

மல்லிப்பட்டினம் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அஃப்ரா பாத்திமாவின் மருத்துவ செலவிற்காக பலரும் தங்களுடைய நிதிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மதுக்கூர், மல்லிப்பட்டினம், செந்தலை பட்டினம் போன்ற ஊர்களில் இன்று(12/07/2019) ஜும்மா விற்கு பிறகு நிதி திரட்டப்பட்டது. இதுதவிர பல்வேறு இடங்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சிறுமியின் மருத்துவ செலவிற்கு வழங்குவதற்காக நிதிகளை திரட்டி வருகின்றனர். இந்த நிதி முழுவதும் தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சிறுமியின் மருத்துவ செலவிற்காக ஒப்படைக்கப்பட உள்ளது.










Post a Comment

Previous Post Next Post