தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம் .!

என் வாழ்க்கையில் இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். விடுதலைப்புலிகளை நான் தொடர்ந்து ஆதரித்ததற்காகவும், இந்திய அரசு ஆயுத உதவியும், பண உதவியும் செய்ததால் உலக நாடுகளில் ஆயுதம் வாங்கி இலங்கையில் ராஜபச்சே அரசு லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது என்பதை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரடியாக சென்று மெமோரண்டமாக கொடுத்தோம். 17 முறை சந்தித்திருக்கின்றேன். இந்த கடிதங்களை தொகுத்து, அண்ணாமலை மன்றத்தில் நூல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு என் மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது.

நீதிமன்றம் விசாரித்தது. இளைஞர்களை திரட்டிக்கொண்டு இலங்கையில் தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டால் நாதி இல்லை என்று போய்விடாது. இங்கிருந்து ஆயுதம் ஏந்தி செல்ல தயாராகவும் இருப்பார்கள். நான் அதற்கு தலைமை ஏற்று செல்வேன் என்று பேசினீர்களா என்று கேள்வி எழுப்பியது. ஆமாம் பேசினேன் என்றேன். இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என்று பேசினேன் என்றேன். அந்த வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்டேன்.

அதற்கு பிறகு ராணி சீதை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதே புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பில் நெடுமாறன் வெளியிட மறைந்த கவிஞர் இன்குலாப் பெற்றுக்கொண்டார். நான் முதல் தடவை பேசிய அதே விதத்தில் பிரதமரிடம் நேரிடியாக கொடுத்த குற்றச்சாட்டுக்கள், நேரிடியாக கொடுத்த கடிதங்கள் அந்த தொகுப்புதான் அந்த நூல். இது எல்லோருக்கும் கிடைக்கும். எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு என் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடைபெற்றது.

இப்படிப் பேசினீர்களா என்று நீதிபதி கேட்டார். ஆமாம் பேசினேன். இந்திய ஒருமைப்பாடு சிதைந்துவிடக்கூடாது. இந்திய இறையாண்மை சிதைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பேசினேன். ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் குற்றச்சாட்டுக்களை வைத்தேன். நான் எதையும் மறுக்கவில்லை. இது ஒன்றும் தேசத்துரோகம் கிடையாது. ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதற்கு, ஈழத்தமிழனத்திற்காக போராடுகிற விடுதலைப்புலிகளைப் பற்றி பேசுவதற்கு, நாடாளுமன்றத்தில் பேசினேன் அதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். வேலூர் சிறையில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு ரிட் மனு தாக்கல் செய்கிறேன்.

Post a Comment

Previous Post Next Post