தஞ்சாவூரில் ஜன.25ல் வேலைவாய்ப்பு முகாம்.!

 



தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக, வேலை தேடும் இளைஞர்களுக்காக, மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணி அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி வருகின்ற 24.01.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முகாமில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ,பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post