தூய்மை பணியில் மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர் ..!!


சமுதாய பனியில் மல்லிப்பட்டினம் நகரம் SDPI கட்சியினர் . . !!!


SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரச் செயற்குழு கூட்டம் கடந்த (4.8.2019) மாலை 4 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் ரஹீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  வளர்ச்சிப் பணிகள்,செயல்பாடுகள், வருகின்ற (6.8.2019) அன்று அதிரையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மக்களை கொண்டு சேர்ப்பது,ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல்,,அதிகமான மக்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறச் செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதியதாக கிளை ஒன்றும் உருவாக்கப்பட்டது.
அக்கூட்டத்தில்
*மாசற்ற மல்லி* நகரமாக மாற்ற  தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.அதில் ஒரு பகுதியாக  இன்று (5.8.2019) காலையில் ஊரின் பல பகுதிகளில் வீடுகள் முன்பு தெருக்கள் ஓரம் இருக்கும் குப்பைகள் அகற்றுவது .
சாக்கடைகளை சரி செய்வது போன்ற பணிகளை மினி டெம்போ  வாகனத்தை கொண்டு நகர நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் தூய்மை பனியில் ஈடுபட்டுவருகின்றனர் .

தகவல் 
SDPI கட்சி
மல்லிப்பட்டிணம் நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்





Post a Comment

Previous Post Next Post