தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்,ஆண்டிக்காடு ஊராட்சி மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகர் மக்களின் சாலை வசதி வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கை நிறைவேற இருக்கிறது.
மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளான தரமான சாலை இல்லாமல் பல ஆண்டுக்களாக மிகவும் கஷ்டபட்டு வந்தனர்.மழைக்காலங்களில் சேறுகளிலும்,சகதிகளிலும் நடக்க கூடிய அவல நிலை இருந்து வந்தது. இதுகுறித்து மல்லி நியூஸ் வாயிலாக செய்திகளை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டு இருந்தோம்.அந்த பகுதி மக்களும் சாலை மறியல் செய்திருந்தனர்.பல அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களையும் அளித்திருந்தனர்.
இந்நிலையில் ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன் சொந்த முயற்சியின் பேரில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் காயிதே மில்லத் நகரில் 160 மீட்டர் நீளம், 10 அடி அகலம் முறையில் சிமெண்ட் சாலை அமைக்கப்படுவதற்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அப்பகுதி மக்களின் பல ஆண்டு கால கனவை நிறைவேற்ற முயற்சித்த ஆண்டிக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் வரதராஜனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Post a Comment