மல்லிப்பட்டினம் அருகே பள்ளிவாகன விபத்து,ஒருவர் மரணம் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!



தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டிணம் மனோராவில் காரும்,பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த பள்ளி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மருத்துவ சிகிச்சை முடித்துவிட்டு மதுக்கூரில் இருந்து வடக்கமாபட்டிணத்தை நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனமும்,பள்ளி
குழந்தைகளை மனோரா சுற்றுலா தளத்திற்கு கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் இருந்து அழைத்து வந்த வாகனமும் மனோரா வளைவில் இரண்டு வாகனமும்,நேருக்கு நேர் மோதி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் பள்ளி குழந்தைகளுக்குக்கும் லேசான காயமும் ,ஆசிரியர்களுக்கும்,பள்ளி தாளாளருக்கும் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளூர் பொதுமக்களுடன் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மூன்று ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனைக்கெ செல்லும் வழியிலே ஒருவர் இறந்துவிட்டார்.ஆசிரியையகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post