பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டிக்கு செல்லும் பெண் போட்டியாளருக்கு உதவித்தொகை வழங்கிய சமூக செயற்பாட்டாளர் யஹ்யா.!

காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டுக்கோட்டை சகோதரிக்கு பயண உதவித்தொகை வழங்கிய சமூக செயற்பாட்டாளர் பட்டுக்கோட்டை யஹ்யா 

2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி வருகிற நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை நியூஸிலாந்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 9 நபர்களில் இருவர் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள்.

மாஸ்டர் பிரிவில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் சகோதரர் ரவிச்சந்திரன் அவர்களும், ஜூனியர் பிரிவில் முதுகலை பட்டதாரி சகோதரி லோக பிரியா அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விவரம் அறிந்த சமூக செயற்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளரான பட்டுக்கோட்டை யஹ்யா அவர்கள் இருவரையும் அவரது அலுவலகத்திற்கு வரவழைத்து தேசியக்கொடி வழங்கி வாழ்த்தி துண்டு போர்த்தி உற்சாகப்படுத்தி, பயண உதவித்தொகையாக அவர் சார்பிலும் அவரை சார்ந்தோரின் சார்பிலும் 13,500/- வழங்கி மகிழ்ந்து மகிழ்வித்தார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர் தென்னவன் ராஜா உடனிருந்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி லோகப்பிரியாவிற்கு பட்டுக்கோட்டையை சேர்ந்த நல்ல உள்ளங்கள் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.

மேலும் இந்த இரண்டு நபர்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ்நாட்டிற்கும் நமது தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் மனதார வாழ்த்தினார்.

Post a Comment

Previous Post Next Post