தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே இரண்டாம்புளிக்காடு~பட்டுக்கோட்டை சாலையில் ஒத்தக்கடை என்னுமிடத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.
பட்டுக்கோட்டையில் இருந்து சம்பை நோக்கி வந்தவரும்,இரண்டாம்புளிக்காடிலிருந்து கோட்டாக்குடி நோக்கி சென்றவரும் நேருக்கு நேர் இருசக்கர வாகனத்தில் விபத்துக்குள்ளாகினர்.
வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் டிவிஎஸ் எக்ஸல் வாகனத்தில் கோட்டாக்குடி நோக்கி சென்றவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இருவருக்கும் முதலுதவி சிகிச்சையளித்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Post a Comment