ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க சார்பில் மல்லிப்பட்டினம் கடைவீதிகளில் துண்டு பிரசங்கம் விநியோகம்...! புகைப்படங்கள் இணைப்பு..!!

 

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மல்லிப்பட்டினம் கடைவீதிகளில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம் தலைமையில் துண்டு பிரசங்கம் விநியோகிக்கப்பட்டது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தி.மு.க. சார்பில் நடைபெற உள்ளது. இதற்கான பிரசங்கம் மல்லிப்பட்டினம் கடை வீதிகளில் பொதுமக்கள்,வணிக நிறுவனங்கள் ஆகிய இடங்களில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மல்லிப்பட்டினம் கிளை செயலாளர் ஹபீப் முகமது,ராமர் கோவில் தெரு கிளை செயலாளர் முனீஸ்வரன்,சின்னமனை கிளை செயலாளர் சின்னையன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி அபுதாகீர்,கிளை அவைத்தலைவர் அப்துல் அஜீஸ்,கூட்டறவு சங்க தலைவர் அப்துல் சமது ஊராட்சி மன்ற தலைவர் ஜின்னா,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி,தாஜூதீன்,வார்டு உறுப்பினர் நூருல் ஹமீது மற்றும் திமுக உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்

 





.

Post a Comment

Previous Post Next Post