தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், படித்த வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம், தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாட்கள் வேலைவாய்ப்புடன் கூடிய இலவசமாக கணினி கணக்கியல் (tally) பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த விரும்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய வேலை உறுதி திட்ட அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தஞ்சாவூர், மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகர், 4 பக்கிரசாமி பிள்ளை தெருவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மின்னஞ்சல் (iobrsetithanjavur@gmail.com) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு ஐஓபி கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயக்குநரை- 04362 -24237
என்ற தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2022 ஆகும் எனமா வட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment