கோவை கார் வெடிப்பு சம்பவம் ஜமாத் மற்றும் கோட்டை ஈஸ்வரன் கோவில் நிர்வாகிகள் சந்திப்பு; ஜமாத் அமைப்பினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அங்கவஸ்திரம் அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.
கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு உலமாக்கள், ஜமாஅத் தலைவர்கள் வந்த நிலையில் கோயிலில் வரவேற்பு.
முஸ்லிம் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ( உலமாக்கள்) வந்த நிலையில் கையெடுத்து கும்பிட்டு வரவேற்பு கொடுத்தனர்.
எங்கள் ( இந்து முஸ்லிம்) ஒற்றுமையை எந்தவொரு நிலையிலும் யாராலும் பிரிக்க இயலாது. நாங்கள் என்றும் உங்களுடன் தான் இருப்போம். தயவு செய்து உங்கள் அரசியல் நோக்கத்திற்காக எங்களை பிரிக்க முயல வேண்டாம் .விரைவில் எங்க பள்ளிவாசலுக்கு இந்து ஆன்மீக தலைவர்கள் மற்றும் குருக்கள் வர உள்ள நிலையில் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று ஜமாஅத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.




Post a Comment