தஞ்சை மாவட்டம்,சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் துறைமுக மீன்வளத்துறை வளாகத்தில் மீன்பிடி படகுகளுக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையின் போது மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில் கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில் வடிகால் வசதி,மழைக்காலங்களில் கருவாடு காய வைப்பதற்கு தனி இடம் அமைத்து தரவேண்டும்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் சாலைகள் சீரமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஹபீப் முகமது வைத்தார்.
சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம்,உதவி இயக்குனர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சிவக்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.





Post a Comment