திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், அக்கட்சியின் பாராளுமன்ற தலைவருமான டி.ஆர் பாலு எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கலந்து கொண்ட கூட்டங்களில் மதவெறியை தூண்டக்கூடிய பேச்சுக்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிய அரசிற்கு கைப்பாவையாக அரசை துன்புறுத்த கூடிய பேச்சுக்களை பேசி வருவதாகவும், ஆளுநராக தன்னுடைய வேலைகள் செய்யாமல் பாஜகவின் பொறுப்பாளி போல் மேடைகளில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாவும் திமுகவினர் மற்றும் பொது மக்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அந்த கடிதத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு எழுதும் கடிதத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் திமுக அலுவலகத்திற்கு வந்து கையொப்பமிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கடிதத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Post a Comment