மல்லிப்பட்டினத்தில் மாற்றுத்திறனாளி பாதுகாப்பு மையத்தில் விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி(படங்கள்).!

 


தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தில் நடைபெற்றது.சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி சிறப்பு ஆசிரியர் ரவிச்சந்திரன்,அனுராதா,மேற்பார்வையாளர் கென்னடி,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பாதுகாப்பு மைய ஆசிரியர்கள் அனுராதா,நாகரெத்தினம்,சித்ரா ஆகியோரும்,நூருல் அமீன்,  மாற்றுத்திறனாளி மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.








Post a Comment

Previous Post Next Post