மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உலக மீன்வள தின கொண்டாட்டம்.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் நவம்பர் 21 உலக  மீன்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை ஆய்வாளர் கங்கேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

மேலும் மீன்வளத்துறை ஆய்வாளர் கங்கேஸ்வரி உள்நாட்டு மீன் உற்பத்தியில் தேசிய அளவில் சிறந்த மாவட்டமாக தஞ்சை மாவட்டத்தை தேசிய மீன்வளத்துறை அறிவித்து இருப்பதை சுட்டிக்காட்டி நிகழ்ச்சியில் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் விசைப்படகு,நாட்டுபடகு மீனவர் சங்க நிர்வாகிகள், கூட்டறவு சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் கலந்துக்கொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post