சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து ஒன்றிய அரசுக்கு மதுரை எம்.பி கண்டனம்.!.

 




சென்னை: 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ரத்து செய்ததற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கல்வி உரிமை சட்டத்தை காரணம் கூறி ஒன்றிய அரசு நிகழ்த்தியுள்ள கொடூரத்தாக்குதல் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவாகரம் குறித்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை தாண்டி வேறு எந்தவொரு அரசியல் கட்சிகளும கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post