பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் அருகே ஐபிஇஏ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் பள்ளி வாகனம் 10க்கு மேற்பட்ட மாணவர்களை அழைத்துகொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த வாகனத்தில் இருந்த மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 2 பேருக்கு அதிகளவில் காயம் ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்த இந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment