தஞ்சை மாவட்டம்,மதுக்கூர் அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில் துண்டான பெண்ணின் கையை இணைக்க ஒரு மணிநேரத்தில் திருச்சி கொண்டு சேர்த்த தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராசிக் அகமது.
மதுக்கூர் அருகே டெம்போ மோதியதில் படுகாயமடைந்த பெண் ஒருவரின் கை அதே இடத்தில் துண்டானது,உடனடியாக அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.கையை இணைப்பதாக இருந்தால் திருச்சிக்கு கொண்டு செல்ல வேண்டாம்,அதுவும் இரண்டரை மணிநேரத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினர்.
இந்நிலையில் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராசிக் அகமது திருச்சி காவேரி மருத்துவமனைக்கு ஒ ரு மணிநேரத்தில் கொண்டு சேர்த்து மேல் சிகிச்சைக்காக அந்த பெண்ணை அனுமதித்துள்ளனர்.
உயிரை பணயமாக வைத்து விவேகமாகவும்,விரைவாகவும் செயல்பட்ட தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராசிக் அகமதை மருத்துவர்கள்,படுகாயமடைந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாரட்டினர்.



Post a Comment