அதிராம்பட்டினம் நகரில் அதிகமான ஹாஜிகள் ஹஜ் கமிட்டி மூலமாக 31/5/2024 அன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் புனித பயணம் மேற்கொண்டனர் ஹாஜிகளை வழியனுப்பி வைப்பதற்காக அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள உலமாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள்,குடும்பத்தினர் ஆகியோர் ரயில் நிலையத்தில் கூடி வழியனுப்பி வைத்தனர்
ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்களின் இதயங்கள் ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு திசையிலிருந்தும் மக்கள் ஹஜ் செய்வதற்கு வந்து ஒன்றுசேர வேண்டும்.‘ஹஜ்ஜுக்கு வரும்படி மக்களைக் கூவி அழையுங்கள்’ என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஆணையிட்டபோது அவர் கேட்டார்: “என் அதிபதியே, உலக மக்களை எவ்வாறு அழைப்பது? என் குரல் அவர்களுக்கு எட்டாதே.” அதற்கு இறைவன், ‘நீர் அழையுங்கள். அந்த அழைப்பைச் சேர்க்க வேண்டிய பொறுப்பு என்னுடையது” என்று பதில் அளித்தான். இப்ராஹீம் அவர்கள் ஒரு கல்மீது நின்றுகொண்டு, ‘மக்களே, உங்கள் அதிபதி ஓர் இல்லத்தை நிர்ணயித்துள்ளான். நீங்கள் அந்த இல்லம் நோக்கிப் பயணம் மேற்கொண்டு ஹஜ் செல்லுங்கள்.’இந்தக் குரல் பூமியின் அனைத்துத் திசையிலும் பரவியது. மரம், செடி, கொடிகள், காடு, மலைக்குன்றுகள், வீடு, மனை, கட்டிடங்கள் அனைத்தும் ‘இதோ, நாங்கள் வந்துவிட்டோம்’ என்று பதில் அளித்தன. (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கசீர்)
அதன்படி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் இதே இரயில் நிலையத்தில் இருந்து இரவு ரயில் மூலம் வழியனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஹாஜிகள் புறப்படும்போது வழியனுப்பி வைக்க வந்தவர்கள் பாங்க் சொல்லி அனுப்பி வைத்தது போன்று இன்றும் பாங்க் சொல்லி ஹாஜிகள் வழியனுப்பி வைக்கப்பட்டனர்
கோரிக்கை:
அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி ரயில் சென்னைக்கு இயக்க வேண்டும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்டர் ஏற்பாடு செய்யவேண்டி பெரும்பாலான ஹாஜிகள் கோரிக்கை விடுத்தனர்
மணிச்சுடர் அதிரை சாவண்ணா


Post a Comment