பாலஸ்தீனின் ரஃபா வீதிகளை ரத்தமாக்கிய சியோனிச இஸ்ரேலின் அடாவடியை கண்டித்து SDPI கட்சி மல்லிப்பட்டினம் நகரம் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை 2 மனியளவில் ஜூம்மா பள்ளி முன்பு பதாகை ஏற்றி கண்டன கோஷம் எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்ப்பட்டதில் கட்சியின் நகர தலைவர் ஜவாஹிர் தலைமை தாங்கினார்.
நகர துனைத்தலைவர் நிஜாமுதீன் சிறப்புரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து முஸம்மில் அவர்களால் கண்டன கோஷம் எழுப்பபட்டது.
இறுதியாக கட்சியின் நகர செயலாளர் பாவா முகைதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இவ் கண்டன ஆர்பாட்டதில் ஜமத்தார்கள்,இளையர்கள் பொதுமக்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.




Post a Comment