தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவிற்கு ஜூம்ஆவிற்கு மெயில் அனுப்பினர்.
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா பல்வேறு குளறுபடிகளுடனும்,சர்ச்சைகளுடனம் இருக்கிறது.இதனை சட்டமியற்ற ஒன்றிய அரசு நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளது.இந்த திருத்த மசோதவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் அனைத்திந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தனால் தயாரிக்கப்பட்ட கடித நகலை ஸ்கேன் செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு அவர்களும் தங்களது கைப்பேசி வாயிலாக மெயில் அனுப்பினர்.
இதில் தமுமுக கிளை தலைவர் செய்யது புகாரி,மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகத்,நிர்வாகிகள் அக்ரம், அகமது குட்டி,பைசல் ரஹ்மான்,நசீம் ஆகியோர் மெயில் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
Post a Comment