'டேபிள் டென்னிஸ்' போட்டியில் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி சாதனை !

பட்டுக்கோட்டை வட்ட அளவிலான 8 பள்ளிகளுக்கு இடையே டேபிள் டென்னிஸ் ( மேஜை பந்து ), விளையாட்டுப் போட்டிகள், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் மாணவர்களிடையே நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்டு முதல் இடம் பிடித்து, வின்னர் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவர்கள் சேக் சுகைல் அகமது, அப்துல் பாசித், ரியாஸ் அகமது, முகமது இப்ராகிம், எஸ். சுகைல் அகமது, முகமது ரசீன் ஆகியோரை பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன், பொருளர் முஹம்மது இப்ராஹீம், முதல்வர் மீனா குமாரி, மேலாளர் அஸ்ரப் அலி, விளையாட்டு ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Post a Comment

Previous Post Next Post