ஷார்ஜா டிராபிக் போலீஸ் மையத்தில் புதிய தானியங்கி இயந்திர சேவை அறிமுகம் !

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஷார்ஜா போக்குவரத்து போலீஸ் மையத்தில் 2 நிமிடங்களில் சேவையாற்றும் 'சஹ்ல்' (SAHL) எனப்படும் புதிய தானியங்கி இயந்திர சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (The Department of Licensing of Drivers and Vehicles of Sharjah Police General Command)

விசா டெபிட் அல்லது கிரடிட் கார்டு (VISA Debit or Credit Card) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இயந்திரத்தின் வழியாக போக்குவரத்து அபராதங்களை செலுத்தலாம் (payment of traffic violations), வாகன உரிமையாளர் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் (renewal of ownership of vehicles) மற்றும் தொலைந்து போன வாகன அனுமதி ஆவணத்திற்கு (issuance of lost ownership) பதிலாக புதிய ஒன்றை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post