முஸ்லீம்கள் நிறைந்த பிலிப்பைன்ஸ் மிண்டானோ பகுதிக்கு சுயாட்சி உரிமை !

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ பகுதி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாகும். இங்கு 1970 ஆம் ஆண்டு முதல் முஸ்லீம்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டத்தை 'மோரோ நேஷனல் லிபரேஷன் பிரான்ட்' (Moro National Liberation Front - MNLF) என்ற குழுவும் அதிலிருந்து பிரிந்த மோரோ இஸ்லாமிக் லிபரேஷன் பிரான்ட்' (Moro Islamic Liberation Front - MILF) என்ற போட்டிக்குழுவும் மேற்கொண்டு வந்தன.

மேலும் கடந்த மே மாதம் முதல் மாராவி பகுதியில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை தீவிரவாதக் குழுக்களும், அரசுப்படையினரும் மேற்கொண்டனர். இந்நிலையில் உலகின் அச்சுறுத்தலான ஐ.எஸ் என்ற பயங்கரவாதக் குழுக்களுடன் மோரோ குழுக்கள் இணையாதிருக்கவும், மிண்டானோ பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை பிலிப்பைன்ஸ் அதிபர் டுயார்டே (Duerte) முடக்கிவிட்டதை தொடர்ந்து சுயாட்சிக்கான (Self Rule) உடன்படிக்கை அரசுக்கும் 2 மோரோ குழுக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இப்பகுதியில் அமைதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 1 வருட காலத்திற்குள் சட்டமாக்கப்பட்டு உரிய அங்கீகாரத்தை பெறும். இதற்கு முன் 1996 ஆம் ஆண்டு இதேபோல் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்று அற்ப ஆயுளில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் நடைபெற்று வந்த இருதரப்பு ஆயுத சண்டையால் சுமார் 1 லட்சம் பேர் மரணித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post