மல்லிப்பட்டினத்தில் அரங்கேறிய வழிப்பறி ..!!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம்,  மல்லிப்பட்டினம் அருகில் சின்னமனை பகுதியை சார்ந்த ஜெயமாலினி என்பவர், இன்று காலை 9 மணி அளவில் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சில வேலைகள் காரணமாக செல்வதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், அதாவது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம்‌, ஸ்மார்ட் கார்டு ஆகிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு சின்னமனை பகுதியிலிருந்து மல்லிப்பட்டினம் கடைத் தெருவை நோக்கி இருந்த இரண்டாம் புலி காட்டில் உள்ள கிராம அலுவலர் அலுவலகத்திற்கு செல்வதாக வந்து கொண்டிருக்கும் பொழுது மல்லிப்பட்டினம் ஐஸ் பிளான்ட்‌ அருகில் சேதுபாவாசத்திரம் ஈசிஆர் சாலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வழிப்பறிக் கொள்ளையர்கள் அந்தப் பையில் பணம் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு அதை வழிப்பறி செய்து விட்டு ஈசிஆரில் தப்பிவிட்டனர். மேலும் அவர்கள் அதில் பணம் எதுவும் இல்லை என்று கத்திய பிறகும் கொள்ளையர்கள் பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் பணம் 200 ரூபாய் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மல்லிப்பட்டினம் முதல் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அல்லது இரண்டாம் புலி காடு ஈசிஆர் சாலையில் ரோஸ் கலர் இந்தப் பையில் மேற்கண்ட ஆவணங்கள் இருப்பதை கண்டால் உடனே மல்லி நியூஸ் அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : 6385240622

Post a Comment

Previous Post Next Post