தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை மணிகூண்டு அருகே தனியார் பேருந்து பிரேக் பிடிக்காததால் மின்கம்பத்தின் மீது மோதி விபத்து.
தஞ்சாவூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டை வந்த தனியார் பேருந்து மணிகூண்டு வந்தபோது, பேருந்தின் பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் பேருந்தை நிறுத்த முயன்றும் முடியவில்லை.
பிரேக் பிடிக்காத காரணத்தால் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு மணிகூண்டு எதிரே உள்ள மின்கம்பத்தின் மீது மோதி பேருந்து நிறுத்தபட்டது.அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதிக்கு விரைந்து வந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.
Post a Comment