*முடிவுக்கு வந்த இழுபறி ..!! அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ..!!*

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதை ஓபிஎஸ், இபிஎஸ், விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தனர்.

அதிமுக - தேதிமுக  இடையே  கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடித்து வந்த இழுபறி இன்று மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முடிவுக்கு வந்தது.  இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் , பிரேமலதா விஜயகாந்த்,  சென்னை கிரவுண் பிளாசா ஓட்டலுக்கு வந்தனர்.  அங்கே கூட்டணி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.    இந்த நிகழ்வின் போது அமைச்சர்களும், சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக பிரமுகர்களும் உடன் இருந்தனர்.

இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்  முதல்வர், துணை முதல்வர், விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் இணைந்து கூட்டணி ஒப்பந்தத்தை அறிவித்தனர்.  தேமுதிகவுக்கு 4  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்கான ஒப்பந்தத்தை காண்பித்தனர்.

Post a Comment

Previous Post Next Post