சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 28/12/2024 எஸ்.டி.பி.ஐ கட்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை நடத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கோரியும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்களை தடுத்து நிறுத்தக் கோரியும், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
Post a Comment