பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை ..! கைவிடப்பட்ட சாலை மறியல் போராட்டம் ..!!

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டினத்தில் வரும் செவ்வாய்க்கிழமை(5/3/2019) மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்தது.

கஜா புயலால் முழுமையாக சேதமடைந்த 288 விசைப்படகுகளில் பகுதி அளவு சேதம் அடைந்த 88 படகுகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள முழுமையாக சேதமடைந்துள்ள படகுகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கஜா புயலால் பாதிப்படைந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் , பழைய அரசாணை 2004 இன் படி 5 லட்சம் மதிப்பீட்டு தொகையை வழங்காமல்,  தற்போது ஏற்ற இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு மீனவர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மற்றும் பகுதி அளவு சேதம் அடைந்த படகுகளுக்கு மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், முழு சேதமடைந்த படகுகளுக்கும் வெகு விரைவில் அறிவித்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 இதை கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடை வீதியில் கடைகள் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்தது.

இதனை அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும என்று சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் இருந்து மீனவர் சங்கத்திற்கு நோட்டிஸ் வந்து இருந்தது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நல சங்க மாநில செயலாளர் A.k தாஜூதீன் அவர்களை அழைத்திருந்தனர். பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில், வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உட்கோ ட்ட நடுவர் தலைமையில் மற்றும்  அதிகாரிகள் தலைமையில் (4/3/3019) பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மீன்வளத்துறை இணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்திற்கும் வெகு விரைவில் தீர்வு காணப்படும் .எனவே ,நீங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க சாலை மறியல்  கைவிடப்பட்டுள்ளதாக மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.


கடந்த 115 நாட்களாக சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றார்கள், இதை கண்டித்தும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.






Post a Comment

Previous Post Next Post