இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி சென்னை இலங்கை தூதரக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இலங்கையில் 3 தேவாலையங்கள், 3 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு 200 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு : சமூக வலைதளங்கள் முடக்கம் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது.

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் : வழிபாட்டு தலங்கள், மத தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க உத்தரவு.

இலங்கை மக்கள் குண்டுவெடிப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; மக்கள் அமைதி காக்கவேண்டும் - இலங்கை அதிபர் மைத்திரி வேண்டுகோள்.

இலங்கையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் பயங்கரவாதம் எந்த விதத்தில் இருந்தாலும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.பெரும்துயரத்தில் உள்ள இலங்கை மக்களுக்கும், அரசுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கும் - இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்.

இலங்கை குண்டுவெடிப்புக்கு அதிமுக கண்டனம் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி ,
இந்திய குடியரசு தலைவர் கண்டனம்.

இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்திற்குரியது : திமுக தலைவர் முக.ஸ்டாலின்.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு அளிக்ககப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post