அதிராம்பட்டினத்திலிருந்து மல்லிப்பட்டினம் வழியாக நேற்று லாரி ஒன்று இரவு வந்து கொண்டிருந்தது. லாரியை முரளிதரன் என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது சாலையில் அமைந்திருந்த தடுப்புகம்பியின் மீது லாரி மோதி விபத்துகுள்ளானது . ஒட்டுனர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது
இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி, டிரைவர் மற்றும் கிளினர் படுகாயமடைந்தனர் இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்திற்குள்ளான லாரியில் இருந்த விறகு கம்புகள் அனைத்தும் அப்புறப்படுத்த பட்டது
இந்த விபத்து குறித்த அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விறகுகம்பு ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சற்று கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பால் வாகன நெரிசல் ஏற்பட்டது.



Post a Comment