தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கிராமத்தில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை ..!!

தமிழகமெங்கும் இன்று காலை 7 மணியளவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகில் உள்ள 15 வார்டுக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறால் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. 4 மணி நேரம் ஆகியும் மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் தொடர்ந்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post