போதை பொருட்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ..!!

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பு சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஜூன் 26 போதை பொருட்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இது அந்தந்த மாவட்ட நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று (27/06/2019) தஞ்சை மாவட்டத்தில் உள்ள காதிர் முகைதீன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளால் மாணவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மதுக்கூர் கிளை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாகவும் பேருந்து நிறுத்தம் போன்ற பகுதிகளிலும், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

#_campus front of india.













Post a Comment

Previous Post Next Post