மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் A.K தாஜூதீன் அவர்களும் உடன் இருந்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்து அவர்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் M.T.K பசீர் அஹமது விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் இதர நிர்வாகிகளும் உடன் இருந்தனர் .
பிறகு அவரது இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.
தமிமுன் அன்சாரி அவர்கள் மீனவர்களிடம் உள்ள குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் சார்பில் மல்லிப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துறைமுகத்திற்கு தூண்டில் வளைவு அமைப்பது போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.
பிறகு நிச்சயமாக அனைத்தும் குறித்து சட்ட மன்றத்தில் பேசுவேன் என உறுதியளித்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களையும் பார்த்த சந்திப்பதற்கு உதவி புரிவேன் என உறுதியளித்தார்.
Post a Comment