மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு கழிவறை மேற்கூரை அமைத்துக் கொடுத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மல்லிப்பட்டினம் ஏரியா ..!!

தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா  சார்பாக மல்லிபட்டின அரசு மேல்நிலை பள்ளிக்கு கழிவறை மேற்குகூறை அமைத்து கொடுக்கப்பட்டது .

கடந்த வருடம் நவம்பர் மாதம் வீசிய கஜா  புயலால் மல்லிபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில்  பெண்கள் பயன்படுத்தும் கழிவறை மேற்குகூறை சேதம் அடைந்தது . இதனால் மாணவிகள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வந்தது இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகள் உடனே    பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பாக கழிவறை மேற்கூரை ரூபாய் 25 ஆயிரம் செலவில் ஆஸ்பிரேட் சீட்டுகளைக் கொண்டு அமைத்துக் கொடுத்தனர்.

இதனையடுத்து  பள்ளியின் தலைமையாசிரியர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 இந்நிகழ்வில்   பாப்புலர் ஃப்ரண்ட் ஏரியா  செயலாளர் முஸ்ஸம்மில் மற்றும் கிளை நிர்வாகிகள் இப்ராம்ஷா , அஸ்கர்  மற்றும் மல்லிபட்டினம் ஜமாத் பொருளாளர் ஷேக் ஜலால்  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா,
மல்லிபட்டினம் நகரம்,
தஞ்சை தெற்கு மாவட்டம்.


Post a Comment

Previous Post Next Post