காஷ்மீர் மக்களுக்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய அதிரை ம.ஜ.க வினர்... நூற்றுக்கணக்கானோர் கைது ..!!

காஷ்மீர் மக்களுக்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய அதிரை ம.ஜ.க வினர்...

 அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று 09/08/2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 மாவட்டச் செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச்செயளாலர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களும், தமுமுக மாநில து. செயலாளர் அஹமது ஹாஜா அவர்களும், நாம் தமிழர் கட்சி மாவட்.ட பொருளாளர் ஜியாவுதின் அவர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பதாக தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோசம் முழக்கத்துடன் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறை கைது செய்து லாவண்யா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


Post a Comment

Previous Post Next Post