தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் ஹூஸ்னுல் ஃகாதிமா மகளிர் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முகைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் மஜ்லிசுல் உலமா சபை தலைவர்,தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் பேரியக்க தலைவர் சேக் அப்துல்லா ஜமாலி தலைமையில் நடைபெற்றது.
மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி ஜமாஅத் தலைவர் அல்லா பிச்சை,மஜ்லிசுல் உலமா சபை செயலாளர் அயூப்கான்,ஜமாஅத் துணைத்தலைவர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் குடும்ப உறவுகள் நிலைத்திட பெரிதும் காரணம் ஆண்களா.? பெண்களா.? என்ற தலைப்பில் சிந்தனையை தூண்டும் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் மதராஷா கல்வி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.





Post a Comment