மல்லிப்பட்டினம் அரசு பள்ளி மாணவிகள் தினமும் பள்ளி சென்று வரும் சாலையில் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் தண்ணீர் தொட்டி ..!!






மல்லிப்பட்டினத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பின்னால் பெரிய குடிநீர் தொட்டி ஒன்று பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்த தொட்டியின் மூலமே மல்லிப்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது.

பல வருடங்களாக இதே தொட்டி இருப்பதால் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இந்த தொட்டிக்கு அருகில் உள்ள சிமெண்ட் ரோடு மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தினமும் காலையிலும் மாலையிலும் பள்ளி சென்று வர பயன்படுத்தும் சாலை ஆகும்.

இதுகுறித்து இருமுறை கிராமசபா கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், புது தொட்டி கட்டிய பிறகே இடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தற்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் இல்லாத காரணத்தினால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகமும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. மல்லிப்பட்டினம் மாணவ, மாணவிகளின் நிலைமையையும் மற்றும் இந்த சாலையை பயன்படுத்தும் பொது மக்களின் நிலைமையையும் கருத்தில்கொண்டு அரசு உடனடியாக புது தொட்டி ஏற்படுத்திவிட்டு இந்த தொட்டியை இடிக்க வேண்டும் என மல்லிப்பட்டினம் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இதற்கு அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும்.

பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் சாலை என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மல்லி நியூஸ் .!

Post a Comment

Previous Post Next Post