மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்.!

தமிழ்நாடு  அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தின் ஆலோசனை கூட்டம் இன்று (15/09/2019) மல்லிப்பட்டினம் மூப்பனார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு இச்சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது பஹாத் முன்னிலை வகித்தார்.  மல்லிப்பட்டினம் யாகூப் அவர்கள் தலைமை தாங்கினார். மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றி


ய தலைவர் ஆசிரியரின் ஜலீல் முஹைதீன் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியும், அவர்களுக்கான அடிப்படை தேவைகளையும் பற்றி விவாதிக்க விவாதிக்கப்பட்டது. அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

இச்சங்கத்தின் மல்லிப்பட்டினம் நகர நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மல்லிப்பட்டினம் நகரத் தலைவராக அசன் முகைதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Post a Comment

Previous Post Next Post