இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
உள்ளாட்சி நாளான நவம்பா் 1 ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிராம ஊராட்சிகளின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனா்.
எனவே, இக்கூட்டத்தில் ஊராட்சிப் பகுதியிலுள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில்,சின்னமனை கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் கிராம சபை கூட்டம் காலை 10:30 மணியளவில் நடைபெறும் என ஊராட்சி மன்றம் அறிவித்துள்ளது.
நாளை(நவம்பர்.1) உள்ளாட்சி தினம் என்பதால் மல்லிப்பட்டினத்தில் உள்ள சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment