மனோரா சுற்றுலா தளம் தற்போது புதிதாக சிறுவர் பூங்கா , படகு சவாரி , பயணிகள் விடுதி என புதுப்பிக்கப்பட்டு கடத்த வாரம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சுற்றுலா தளத்தை பார்வையிட உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மக்கள் அதிகமாக வருகிறார்கள்.
கடந்த 29.10.2022 அன்று ஒரு பயங்கர விபத்து நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனை கருத்தில் கொண்டு விபத்துக்களை தடுத்திட மனோரா உள்சாலை பிரியும் ECR சாலையில் பேரிகேட் அமைத்து தர மாநில விவசாய சங்க தலைவர் மல்லிப்பட்டினம் A.கமால் பாட்சா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் .
மேலும் ECR சாலையில் உள்ள தாமரை குளத்தில் கிரில் வேலி அமைத்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Post a Comment