செந்தலையில் நட்பு பார்வையற்றோர் பொது நல அறநிலை அறக்கட்டளை என்ற நன்கொடை ரசீது மற்றும் அடையாள அட்டையுடன் ஒரு பெண் ஊரில் செய்துள்ளார் அப்போது மாருதிப்பட்டினம் தெருவில் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டுள்ளார் தண்ணீரை வாங்கி குடித்து விட்டு அந்த பெண் சென்றுள்ளார் பின்பு அந்த வீட்டில் இருந்த செல்போன் திருடு போனது தெரியவந்தது
நட்பு பார்வையற்றோர் பொது நல அறநிலை அறக்கட்டளை என்ற நன்கொடை ரசீதில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது. இதுபோன்ற போலியாக ரசீதுகளை அடித்துக்கொண்டு ஏமாற்றுவதும் இது போன்ற திருட்டில் ஈடுபடுவதும் நடைபெற்றுவருகின்றது.
திருட்டில் ஈடுபட்டு முன்னுக்கு பின் முரணான பதில் கூறிய அந்த பெண்ணை இளைஞர்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர்.
இது போன்று பல ஊர்களில் நன்கொடை ரசிகர்களை வைத்துக்கொண்டு பல பெண்கள் வசூல் செய்து வருகின்றனர். எனவே அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது போலியாவும் இருக்கலாம் எனவே பொதுமக்கள் இதுபோன்று வசூல் செய்ய வரும் பெண்கள் அல்லது ஆண்களை வீட்டு வாசலிலேயே வைத்து நன்கொடையை வழங்கி அனுப்பி விடுவது சிறந்தது.
உதவி செய்யும் குணம் என்பது அது மிகவும் சிறந்த குணம், உதவி செய்தாலும் நமது உடமைகளை பொருள்களை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.


Post a Comment