ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா இருவரும் மாறுபட்ட தீர்ப்பு.
ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என ஹேமந்த் குப்தாவும், தடை செல்லாது என சுதான்சு துலியாவும் தீர்ப்பு.
இந்த இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் வேறு ஒரு அமர்வுக்கு மாற்றப்படும்.
இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தீர்ப்பளித்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்றது.
Post a Comment