மீனவளத்துறை அமைச்சருக்கு தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை..!

தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது தற்போது தஞ்சை மாவட்ட படகுகள் டீசல் விலை உயர்வினாலும் உதிரி பாகங்கள் விலை ஏற்றத்தினாலும் விசைப்படகுத் தொழில் நலிவுற்று வாழ்வாதாரம் இழந்து விசைப்படகு மீனவர்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினந்தோறும் காலை சென்று மறுநாள் காலை திரும்புவதால் எரிபொருள் அதிக செலவாகுவதால் அதிகப்படியான நஷ்டம் ஏற்படுகிறது. நாகை கடலூர் சென்னை காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்கு கடலுக்கு செல்வதை போல தஞ்சை மாவட்ட மீனவர்களும் கடலில் தங்கி மீன் பிடித்தால் எரிபொருள் சிக்கனமும் ஏற்படுவதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்ற கோரிக்கையை அரசுக்கு பலமுறை கூறியும்,வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் ஒரு மாத காலத்தில் அனுமதி வாங்கி தருவதாக கூறி இரண்டு மாதம் ஆகியும் எந்தவித முன்னெடுப்பும் செய்யப்பட வில்லை.

இதன்காரணமாக மீனவர்கள் சொல்லேனா துயரத்திற்குள்ளாகி வருகின்றனர்.தங்கு கடல் மீன்படிப்பதற்கு தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கும் அனுமதி தரவேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post