கைக்குழந்தையுடன் வழிதவறி வந்த பெண்ணை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த அதிராம்பட்டினம் கவுன்சிலர் அப்துல் மாலிக்.!

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்திற்கு கைக்குழந்தையுடன் வழிதவறி வந்த எஸ்பி பட்டினத்தை சேர்ந்த பெண்ணை அதிரை நகராட்சி கவுன்சிலர் அப்துல் மாலிக் அந்த பெண்ணின் தந்தையிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

இன்று(அக்.21) அதிகாலையில் எஸ்பி பட்டினத்தை சேர்ந்த பெண் பிறந்த கை குழந்தையுடன் வலி அறியாமல் அதிராம்பட்டினத்திற்கு வந்துள்ளார்.  மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த  பெண் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு அறியாமல் திகைத்து போய் அதிராம்பட்டினத்தில் சில பகுதிகளில் சுற்றி வழி அறியாமல் நின்று கொண்டிருந்தார்.


அந்த வழியாக வந்த 24 வது வார்டு மமக நகர்மன்ற உறுப்பினரும்,  தமுமுக துணை தலைவர் அப்துல் மாலிக் விசாரிக்கும் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை 
தந்துள்ளார். அந்த பெண் எஸ் பி பட்டினம் மட்டுமே என்று கூறியுள்ளார்.இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தையை தொடர்பு கொண்டு தகவலை கூறினார். தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பெண்ணுடைய  தந்தை அதிராம்பட்டின் விரைந்து 
வந்துள்ளார். 

இருவரையும்  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று காவல்
ஆய்வாளர்களுடன் விஷயத்தை எடுத்துரைத்த 24 வது வார்டு மமக நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் 
அவர்கள் இருவரையும் ஊருக்கு அனுப்பி வைப்பது  என்று முடிவு செய்யப்பட்டது . 

 சமூக ஆர்வலர் அதிரை  சகோதரர் அட்மின் ரஜப்பு மைதீன் , அப்துல் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர். 

பேருந்து நிலையம் அழைத்து சென்று அந்தப் பெண் மற்றும் அவருடைய குழந்தையையும தகப்பனாருடன் ஒப்படைத்து ஊருக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.


Post a Comment

Previous Post Next Post