பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும். கட்சியை சரியாக வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தீர்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என கோபமாக தெரிவித்தார்.
Post a Comment