எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் திடீர் உண்ணாவிரதம் அறிவிப்பு.!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அமர்த்த வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பினர் சபாநாயகர் அப்பாவுவிடம் முறையிட்டு அமளியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து அவையில் கூச்சலிட்டதால் இபிஎஸ் தரப்பு எம்எல்ஏ.,க்களை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு உத்தரவிட்ட சபாநாயகர், இன்றைய (அக்.18) சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க அவர்களுக்கு தடை விதித்தார். அதேநேரத்தில் நாளைய கூட்டத்தொடரில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் வெளியான அறிக்கையில் நாளை உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 தமிழக சட்டசபையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை கண்டித்து, பழனிசாமி தலைமையில், அதிமுக எம்எல்ஏ.,க்கள் பங்கேற்கும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம், நாளை (அக்.,19) சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post